போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள மேலப்புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 37). இவர் சம்பவத்தன்று ஆர்.டி.மலை பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணம் வைத்து சூதாடினார். இதையடுத்து தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜீவ்காந்தி மற்றும் அவரது நண்பர்களை பிடித்து வந்து, தோகைமலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜீவ்காந்தி என்னை போலீஸ் நிலையத்திற்கு எப்படி அழைத்து வரலாம் என போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலிடம் கூறி தகராறில் ஈடுபட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தங்கவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ராஜீவ்காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story