கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நாகூர் யூசுப்பியா நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு, இதில் தொடர்புடைய ஒருவரை தேடிவந்தனர். இந்தநி்லையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். பி்ன்னர் அவரை போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளைம் வண்டிப்பேட்டையை சேர்ந்த அல்லிமுத்து மகன் சதீஷ் (வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.