வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூரில் கடந்த 19-ந்தேதி சந்தோஷ்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மேலும் .இந்த கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் உள்பட 7 பேர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மணவாளநல்லூர் கீழே தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி(வயது24) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று குடவாசல் அருகே உள்ள பரவக்கரை பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த விக்கியை போலீசார் கைது செய்து, திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story