தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு


தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 Dec 2022 7:00 PM GMT (Updated: 6 Dec 2022 7:01 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள சித்தனங்குடி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கருப்பையன் (வயது 64). தொழிலாளி. இவர் நேற்று காலை, லெட்சுமாங்குடி, மரக்கடை தெருவில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு தென்னை மரத்தில் ஏறியபோது கருப்பையனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அவர் மரத்தின் மேலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கருப்பையன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story