பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோவில் கைது
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
மணப்பாறையை அடுத்த காரைப்பட்டி அருகே உள்ள மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வெற்றி வேல் (வயது 53). இவர் துவரங்குறிச்சி அருகே ஒரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகளிடம் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி தன்னுடைய டிபன் பாக்சில் சாப்பாடு கொடுக்கவே அந்த டிபன் பாக்சை திரும்ப மாணவியிடம் கொடுத்த போது அதில் வெற்றிவேல் காதல் கடிதம் மற்றும் சாக்லெட் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மாணவி உங்கள் பிள்ளைகளிடம் இது போன்று கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு மாணவியின் கையை பிடித்து இழுத்ததோடு உடன் இருந்த 2 மாணவிகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறினர். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.