சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அரியலூர்

பலாத்கார முயற்சி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). இவரது வீட்டில் உள்ள இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி ஒருவர் இலந்தை பழம் பறிப்பது வழக்கம்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி இழந்தைபழம் பறிக்க வந்த சிறுமிக்கு ரூ.10 கொடுத்து மிட்டாய் வாங்கிக்குமாறு கூறிய இளங்கோவன், அந்த சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளார். இதனால் பீதியடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

17 ஆண்டுகள் சிறை

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளங்கோவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story