பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ வழக்கில் கைது


பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ வழக்கில் கைது
x

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சசிகுமார் காட்பாடி தாலுகா பொன்னை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது உறவினர் மகளான பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை பொன்னை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தார்.

1 More update

Next Story