காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கழுகுமலை பகுதியில் ஆறுமுகம்நகர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 18 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரி கந்தசுப்பிரமணியன் விரைந்து வந்து விசாரணை நடத்தி, ரேஷன் அரிசி கடத்தியதாக கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த உதயசிங் (வயது 47) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story