காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

கூட்டப்பனை பகுதியில் காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று உவரி-பெரியதாழை ரோட்டில் கூட்டப்பனை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கார் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லக்குடி விளையை சேர்ந்த வினு (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக களியக்காவிளையை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story