நகைக்கடையில் திருட முயன்றவர் கைது


நகைக்கடையில் திருட முயன்றவர் கைது
x

பொள்ளாச்சியில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு வாடிக்கையாளர் போல் ஒருவர் வந்தார். பின்னர் அவர் கடை ஊழியரிடம் நகை வாங்க வேண்டும் என்றும், டிசைன் காண்பிக்குமாறு கூறினார். இதையடுத்து ஊழியர் ஒவ்வொரு நகையாக எடுத்து காண்பித்து கொண்டிருந்தார். அப்போது ஊழியர் அலமாறியில் உள்ள நகையை எடுப்பதற்குள், அந்த நபர் திடீரென நகையை திருடிக்கொண்டு தப்பி ஓடினார்.

இதனைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த நபரை துரத்திச்சென்று பிடித்தனர். பின்னர் அந்த நபரை பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் இடிக்காடு பகுதியை சேர்ந்த அஜய் (வயது 43) என்பதும், வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 பவுன் நகையை மீட்டனர்.


Next Story