கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சுகேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னசாமி, பொருளாளர் வேடி ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாநில தலைவர் திருமலைவாசன், பொதுச் செயலாளர் ரவி, துணைத் தலைவர் சிவசங்கரன், செயலாளர் (பணி நிறைவு) லட்சுமணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இணை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார். மாநாட்டில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். பொங்கல் போனசை நாள் கணக்கில் வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.