உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாநாடு-பேரணி


உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாநாடு-பேரணி
x
திருப்பூர்


உடுமலையில் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 13-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு ெரயில் நிலையத்தின் முன்பு பேரணி தொடங்கியது.பேரணிக்கு துணைத்தலைவர்கள் காளிமுத்து, ரங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து பேரணி ராஜேந்திரா சாலை, பஸ் நிலையம், கல்பனா சாலை, கச்சேரிவீதி, பாபுகான் வீதி வழியாகச் சென்று நேரு வீதியில் உள்ள அலுவலகத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மாநாடு தொடங்கியது. தி.மு.க. நகர துணைச்செயலாளர் வக்கீல்.எஸ். செந்தில்குமார் மற்றும் வக்கீல் தம்பி பிரபாகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணி மற்றும் மாநாட்டை முன்னிட்டு உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story