கருவேப்பிலங்குறிச்சியில் முதல்நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி


கருவேப்பிலங்குறிச்சியில் முதல்நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி
x

கருவேப்பிலங்குறிச்சியில் முதல்நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் குறு வட்ட அளவிலான முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்தி, ஊராட்சி தலைவர் சீத்தாலட்சுமி, வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் வரவேற்றனர். பயிற்சியாளர் தவுலத்கனி, விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், வெள்ள அபாய காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வாறு தகவல் அளித்து பாதுகாப்பாக வெளியேற்றுவது, தீ விபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story