மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளி சார்பில் காமராஜர் உருவ படத்துடன் மாணவிகள் ஊர்வலம்


மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளி சார்பில் காமராஜர் உருவ படத்துடன் மாணவிகள் ஊர்வலம்
x

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளி சார்பில் காமராஜர் உருவ படத்துடன் மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவள்ளூர்

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெகஜோதி வரவேற்றார். தேசியக்கொடி ஏற்றி, மாணவிகளின் பேரணியை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் ஏ.தங்கம், சின்னசேக்காடு கிராம சேவா சங்க தலைவர் அருணாச்சலம், சென்னைவாழ் நாடார் சங்க துணைச்செயலாளர் செல்லத்துரை, காமராஜர் கல்வி பாசறை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

பின்னர் பள்ளி மாணவிகள் காமராஜர் புகழ்பாடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தர்மபண்டு சார்பில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் உருவப்படம் வாகனத்தில் ஊர்வலமாக முன்னால் சென்றது. ஊர்வலத்தில் மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் ஹரிஹரன், பொருளாளர் பொன்ராஜ், சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மணலி எம்.பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி நன்றி கூறினார்.


Next Story