மணப்பாடு புனித வளன்-புனித மரியன்னை பள்ளிகளின் விளையாட்டுவிழா
மணப்பாடு புனித வளன்-புனித மரியன்னை பள்ளிகளின் விளையாட்டுவிழா நடந்தது.
உடன்குடி:
மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு பள்ளி் முன்னாள் மாணவரும், தூத்துக்குடி மீன்வளகல்லூரி பேராசிரியருமான பார்த்திபன் தலைமை தாங்கினார்.பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவிற்கு பள்ளி முன்னாள் மாணவரும், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வருமான சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் வரவேற்று ேபசினார். புனித வளன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜே. லூர்து எட்வின் பிளாரன்ஸ், புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் டிரோஸ் ஆகியோர் பள்ளிகளின் ஆண்டறிக்கைகளை சமர்ப்பித்தனர். கடந்த கல்வியாணடில் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.