அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை


அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை
x

அய்யப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் சின்னகடைதெருவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவில். இக்கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு 15-ம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து பால்குடம் எடுத்து கொண்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யப்ப பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அய்யப்பனுக்கு பாலாபிஷேகம் செய்யபட்டது. பின்னர் சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், திரவியபொடி, புனிதநீர் மற்றும் நெய் கொண்டு அய்யப்பனுக்கு சரண கோசத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது. இதனையடுத்து கன்னிபூஜை நடைப்பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.


Next Story