பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்


பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
x

பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் மண்டல பூஜை மண்டகப்படிதாரர்களால் நடத்தப்பட்டது. 48 நாட்கள் நிறைவு பெற்றதையடுத்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் திரவுபதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றினார்கள். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூலாம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story