மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை


மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை
x

மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்தி விநாயகர், கருப்பராயன சாமி, முனியப்பன் சாமி சன்னதிகளும் உள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 15 நாட்களாக சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது. இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

இதில் மாகாளியம்மன், சித்தி விநாயகர், கருப்பராயன சாமி, முனியப்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story