விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா


விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை மாவட்டம் உருவானபோது (1985-ம் ஆண்டு) கலெக்டர் அலுவலக வளாக கட்டிடம் கட்டும் முன்பு ஏற்படுத்தப்பட்டது. இக்கோவிலில் 38 ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று மண்டலாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள இடத்தில் 108 சங்குகளில் புனித தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், திருப்புவனம் அயோத்தி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, அலுவலக கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், மானாமதுரை வட்டாட்சியர் ராஜா, திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன், பாலசுப்பிரமணிய சுவாமி, செல்வராஜ், சங்கர சுப்பிரமணியன், மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story