காளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு


காளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
x

காளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவடைந்தது.

கரூர்

தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சி நாகநோட்டக்காரன்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. மேலும், இங்கு சந்தன கருப்பண்ண சுவாமி, விநாயகர், பாலதண்டாயுதபாணி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. அதன்பின்னர் பல்வேறு வகையான பூஜை பொருட்களால் கோவில் முன்பாக உள்ள யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story