வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை


வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை
x

வானாபுரத்தில் வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வானாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story