மங்கள நாயகி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


மங்கள நாயகி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

திருமருகல் அருகே மங்கள நாயகி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் கிராமத்தில் மங்கள நாயகி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு விழா கடந்த 11-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 12-ந் தேதி காலை கணபதி, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், மாலை வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் குடமுழுக்கும், மூலஸ்தான குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story