மங்களமேடு புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

மங்களமேடு புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிவந்த ஜனனிபிரியா கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணி மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சீராளன் நேற்று மங்களமேடு உட்கோட்டத்தின் 8-வது துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மங்களமேடு, குன்னம், வி.களத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






