ராமநாதபுரத்தில் மாம்பழ விற்பனை விறுவிறுப்பு


ராமநாதபுரத்தில் மாம்பழ விற்பனை விறுவிறுப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் உச்சத்தை தொட்டுள்ளதால் மாம்பழ விற்பனை களைகட்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் குவித்து வைத்து கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் உச்சத்தை தொட்டுள்ளதால் மாம்பழ விற்பனை களைகட்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் குவித்து வைத்து கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

மாம்பழ சீசன்

முக்கனிகளில் ஒன்றான மா, பலா, வாழை ஆகியவற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள மாம்பழ சீசன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மாம்பழ சீசன் தொடங்கி ஜூலை மாத இறுதி வரை விற்பனை அமோகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாக உள்ளதால் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மாம்பழம் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது. சீசன் ஆரம்பித்த காலத்தில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையான மாம்பழம் படிப்படியாக விலை குறைந்து கடந்த மாத இறுதியில் ரூ.100 என விற்பனையானது.

கிலோ 50-க்கு விற்பனை

இந்நிலையில் தற்போது சீசன் உச்சத்தை தொட்டுள்ளதால் மாம்பழ விலை சரிவை கண்டுள்ளது. சப்போட்டா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் போன்ற உயர் ரக மாம்பழங்கள் கூட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ராஜபாளையம் சப்போட்டா மாம்பழம் கடந்த மாதம் ரூ.120 வரை ஒரு கிலோ விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ.50 என சரிவை கண்டுள்ளது. எங்குபார்த்தாலும் ராஜபாளையம் சப்போட்டா 2 கிலோ 100 என விற்பனை செய்யப்படுவதை காண முடிகிறது. சீசன் களைகட்டி உள்ளதால் பழுத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்காரணமாக கல் வைத்து பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்கள்தான் விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் அதிகரிப்பு

இதுகுறித்து மாம்பழ வியாபாரி குமார் என்பவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகமாகி விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாம்பழங்கள் விலையும் குறைந்துள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதி வரை சீசன் நன்றாக இருக்கும் என்பதால் அடுத்த மாத தொடக்கத்தில் விலை அதிகரித்து சீசன் முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story