யானைகளால் மா மரங்கள் சேதம்


யானைகளால் மா மரங்கள் சேதம்
x

ராஜபாளையம் அருேக யானைகளால் மா மரங்கள் சேதமாகின.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருேக யானைகளால் மா மரங்கள் சேதமாகின.

மா மரங்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி குடிநீர் தேக்கத்திற்கு பின்புறம் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் தோப்பு உள்ளது. இந்த நிலத்தை கணபதி சுந்தரநாச்சியார் புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு அவர் மா சாகுபடி செய்து அதனை பராமரித்து வந்தார்.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அனைத்து மரங்களிலும் மாங்காய்கள் நன்றாக விளைந்துள்ளது. இந்தநிலையில் வேலியை உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானைகள் காய்த்த நிலையில் இருந்த 32 மா மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சேதப்படுத்தப்பட்ட மா மரங்களை பார்வையிட்டனர்.

நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய், தென்னை ஆகியவற்றை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தநிலையில் யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, மா ஆகியவற்றை அடிக்கடி சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வளர்த்த மரங்கள் யானைகளால் சேதமாகி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானைகளால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உடனே நிவாரணம் வழங்கவும், யானைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story