பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் ஆள்இறங்கு குழிகள்-விபத்தில் சிக்குவதால் கடும் அவதி


பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் ஆள்இறங்கு குழிகள்-விபத்தில் சிக்குவதால் கடும் அவதி
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகள் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கிறது. மேலும் விபத்தில் சிக்குவதால் கடும் அவதிப்படுகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகள் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கிறது. மேலும் விபத்தில் சிக்குவதால் கடும் அவதிப்படுகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.170 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. நகராட்சி மூலம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ராஜாமில் ரோட்டில் ஆள்இறங்கு குழி சேதமடைந்து கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களை அந்த குழி பதம் பார்த்து விடுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகளால் நகரில் பல இடங்களில் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தரம் இல்லாத பணிகள்

பொள்ளாச்சி நகரில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடக்கத்தில் இருந்தே தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை உறுதி செய்யும் வகையில் நகரில் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஆள்இறங்கு குழிகள் சேதமாகி கிடக்கின்றன. ராஜாமில் ரோட்டில் குழிக்கு போடப்பட்ட மூடியில் உள்ள சிமெண்டு பெயர்ந்து, கம்பிகள் மட்டும் உள்ளன.

இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டுகொள்வதில்லை. விபத்துக்கள் ஏற்பட்டு ஏதாவது உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் சேதமடைந்த ஆள்இறங்கு குழியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் இதுபோன்று சேதமடைந்த குழிகளை கணக்கெடுத்து அவற்றை சரிசெய்த பிறகு திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story