மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்


மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்
x

பங்காரு அடிகளார் மரணம் அடைந்ததையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

மாணிக்கம்தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பங்காரு அடிகளார் மரண செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன். ஆதி பராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக நடத்தியவர் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆதி பராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்ய வழிபட செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது. பங்காரு அடிகளாரை இழந்து வாடும். குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


1 More update

Next Story