ஓமலூர் கோல்காரன்வளைவு அருகேஉடைந்த கூட்டுக்குடிநீர் குழாய் வால்வு சீரமைக்கப்பட்டது
ஓமலூர்
சேலம் மாவட்டம் மேட்டூர் -ஆத்தூர் நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் ஏற்றும் நிலையத்தில் வால்வு உடைந்தது. இதனால் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியது. தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூட்டுக் குடிநீர் திட்ட நீர் ஏற்றும் மோட்டார்களை நிறுத்தினர். அப்படி இருந்தும் தொடர்ந்து வெளியேறியதால், நீரேற்றும் நிலைய அறை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த கூட்டு குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் தமிழரசி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் விரைந்து வந்தனர். உடைந்த வால்வை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். வால்வு சரிசெய்யும் பணி முடிவடைந்து குடிநீர் குழாயில் தண்ணீர் ஏற்றும் பணி தொடங்கியது. வால்வை உடனே சரிசெய்து குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.