புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் முதல்-அமைச்சர் அறிவிப்பு


புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர்.

கலெக்டர் அலுவலகத்தில்...

கருணாநிதி, மிகவும் பின் தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கிணங்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கினார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னரின் திருவுருவச்சிலையை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருணாநிதி திறந்து வைத்து, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

நினைவு மணிமண்டபம்

மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் அவரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story