மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து கூட்டம் ஒத்திவைப்பு


மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து கூட்டம் ஒத்திவைப்பு
x

மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மணிமுத்தாறு நகர பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியும் உள்ளடங்கும். மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து தேர்தலில் தி.மு.க. கூட்டணி 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வென்றது. இதனால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளில் தி.மு.க.வினரே உள்ளனர்.

இந்த நிலையில் மணிமுத்தாறு நகர பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நகர பஞ்சாயத்து அலுவலக கூட்டரங்குக்கு தலைவர், துணைத்தலைவர் வந்தனர். ஆனால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கவுன்சிலர்கள் 13 பேரும் கூட்டத்தை புறக்கணித்து, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சத்யதாசிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மேலும் நகர பஞ்சாயத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி, செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள், வெளிநடப்பு செய்வதாக கூறி சென்றனர்.

இதனால் நகர பஞ்சாயத்து கூட்டம், மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது.


Next Story