மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு - பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு தடை நீட்டிப்பு
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நெல்லை,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் மணிமுத்தாறு அருவியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story