மணிமுத்தாறு அருவி சாலையில் சென்ற காட்டு யானைகள்


மணிமுத்தாறு அருவி சாலையில் சென்ற காட்டு யானைகள்
x

மணிமுத்தாறு அருவி சாலையில் சென்ற காட்டு யானைகள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியான மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் இங்குள்ளது. இந்த நிலையில் மணிமுத்தாறு வன சோதனைச்சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் சாலையில் குட்டியுடன் யானைகள் சென்றுள்ளன. இதில் இரு யானைகள் ஜோடியாக சென்றதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story