மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி


மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி
x

மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி

அம்பை:

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.

இதற்கிடைேய, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் மலைப்பகுதியில் தற்போது மழை குறைந்தது. அதன் காரணமாக மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story