மணியம்பட்டு-அவரக்கரை பழைய சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டும்


மணியம்பட்டு-அவரக்கரை பழைய சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டும்
x

மணியம்பட்டு-அவரக்கரை பழைய சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் எம்.நிர்மலாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை



மணியம்பட்டு-அவரக்கரை பழைய சிப்காட் சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் எம்.நிர்மலாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மணியம்பட்டு ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள மணியம்பட்டு ஊராட்சியில் மணியம்பட்டு, கீழ்மணியம்பட்டு, பொன்னம்பட்டு, ராஜீவ்காந்தி நகர், ஐ.ஓ.பி. நகர், அம்பேத்கர் நகர், ஆறுமுகம் நகர், சிப்காட் ஊழியர்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. ஊராட்சி தலைவராக எம்.நிர்மலா மோகன் உள்ளார்.

ஊராட்சியில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

15-வது நிதி குழு மானியம் மூலமாக ராஜீவ் காந்தி நகர் மூர்த்தி தெருவில் ரூ.5 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், மணியம்பட்டு கிராமம் மேட்டுத்தெங்கால் முதல் மணியம்பட்டு வரை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் பைப்லைன், மணியம்பட்டு பஜனை கோயில் தெருவில் ரூ.5½ லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், ஊராட்சி நிதியில் ராஜீவ் காந்தி நகர் மூர்த்தி தெருவில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை, பொன்னம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.1½ லட்சத்தில் சிமெண்டு சாலை, ஐ.ஓ.பி. நகர் நேதாஜி தெருவில் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐ.ஓ.பி. நகரில் ரூ.14½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை, ஜி.கே. ஆஸ்பத்திரி முதல் அவரக்கரை வரை சாலை விரிவாக்கத்தில் கால்வாய் குறுக்கே 2 சிறுபாலங்கள், கீழ்மணியம்பட்டில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ரைஸ்மில் தெரு வரை பைப்லைன், ஐ.ஓ.பி. நகர் பொன்னம்பட்டு வரை, அம்பேத்கர் நகர் நாவலர் தெரு, அவரக்கரை முதல் மணியம்பட்டு வரை 60 தெரு விளக்குகள் அமைத்தது உள்ளிட்ட பணிகளை செய்து முடித்துள்ளேன்.

பழைய சிப்காட் சாலை

அம்பேத்கர் நகரில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய், மணியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டுள்ளோம். விரைவில் பணிகள் நடைபெற உள்ளது.

மணியம்பட்டு-அவரக்கரை பழைய சிப்காட் சாலையை சீரமைத்து தர வேண்டும். மணியம்பட்டு ஏரியை தூர்வார வேண்டும். பொன்னியம்மன் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்.

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் வேண்டும், பழைய துணை சுகாதார நிலையம் பாழடைந்து உள்ளது. புதிதாக கட்டித்தர வேண்டும். கால்நடை மருத்துவமனை வேண்டும்.

சிப்காட் தொழிற்சாலை கழிவுநீர் கால்வாய் மூலம் ஏரியில் கலக்கிறது. அதேபோல் மணியம்பட்டு, நவ்லாக் ஊராட்சிகளில் இருந்தும் 40 சதவீத கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி நீர் முழுவதும் பாழாகி விடுகிறது. எனவே தனி கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியே விட வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி மூலமாக அரசின் கவனத்திற்கு எங்களின் கோரிக்கையை தெரிவித்திருக்கிறோம்.

மேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை உடனடியாக தீர்த்து வைக்கிறேன். குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கி வருகிறோம். தெரு விளக்குகள் எரியாமல் இருந்தால் அதனை உடனே சரி செய்து விடுகிறோம். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக தூர் வாரி விடுகிறோம்.

முன்மாதிரியான ஊராட்சி

மேலும் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட கவுன்சிலர் பி.செல்வம், ஒன்றிய கவுன்சிலர் எல்.பாப்பாத்தி ஜான் ஜெயபால் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் யூ.ஜெயஸ்ரீ உமாசங்கர், வார்டு உறுப்பினர்கள் பி.ஜெயக்குமார், பி.சிட்டிபாபு, ஆர்.ஜெகன்நாதன், எஸ்.சசிகுமார், எச்.வனிதா ஹரிபாலன், எஸ்.கிரிஜா சுரேஷ், எஸ்.கௌரி சிவா, ஏ.ராஜேஸ்வரி அருள்தாஸ் ஆகியோருடன் இணைந்து மணியம்பட்டு ஊராட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்றடைய செய்து, மாவட்டத்தில் முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story