அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சப்பை
திருவாரூர்
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து இனி கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்கள் வாங்குவதாகவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story