குமாரப்பட்டியில் மஞ்சுவிரட்டு


குமாரப்பட்டியில் மஞ்சுவிரட்டு
x

குமாரப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே உள்ள குமாரப்பட்டியில் முனியாண்டி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் காளையை அவிழ்த்து விட்டனர். பின்னர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.


Next Story