கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு


கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர், ஜூன்.4-

திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்யபத்தூர் அருகே சிறுகூடல்பட்டியில் உள்ள மலையரசியம்மன் கோவிலில் வைகாசித் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பால்குடம் விழாவும், மாலை நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மஞ்சுவிரட்டை முன்னிட்டு மலையரசியம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்று விநாயகர் கோவில் வழியாக நொண்டி கருப்பர் கோவிலில் வழிபாடு செய்து நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், வயிரவன் அம்பலம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று குன்னுவயல் பகுதியில் அமைந்துள்ள தொழுவிலிருந்து காளைக்கு மரியாதை செய்யப்பட்டது.

பரிசு

இதைதொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிராவயல், திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதில் சீறிபாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்றது.

வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கபட்டது.


Next Story