மானூர் அரசு கல்லூரி கட்டுமான பணி புதிய இடத்தில் தொடங்கியது-கலெக்டர் தகவல்


மானூர் அரசு கல்லூரி கட்டுமான பணி புதிய இடத்தில் தொடங்கியது-கலெக்டர் தகவல்
x

மானூர் அரசு கல்லூரி கட்டுமான பணி புதிய இடத்தில் தொடங்கியது.

திருநெல்வேலி

மானூர் அரசு கல்லூரி கட்டுமான பணி புதிய இடத்தில் தொடங்கியது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

அரசு கலைக்கல்லூரி

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா மதவக்குறிச்சி கிராமத்தில் இருபாலர் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்கு பொதுப்பணித்துறை மூலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த இடத்தின் மிக அருகில் சிமெண்டு நிறுவனம் சார்பில் சுரங்கம் அனுமதி பெற்றிருப்பதனால் அங்கு கட்டுமான பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பணியை மேற்கொண்டால், நகர் ஊரமைப்பு துறையின் பணி நிறைவு சான்று பெற்று கல்லூரியை திறக்க சாத்தியமில்லை.

இதையடுத்து கல்லூரி கட்டுமானத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மானூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் அவசியம் கருதியும், கல்லூரியை மதவக்குறிச்சி கிராமத்திலேயே அமைத்திட வேண்டும் என்று அந்த ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அதே கிராமத்தில் வேறு இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

புதிய இடத்தில் கட்டுமான பணி

அதன்படி மதவக்குறிச்சியில் 9.4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிலத்தை இந்தியா சிமெண்டு நிறுவனம் வாங்கி, கல்லூரி கல்வி இயக்குனர் பெயருக்கு பதிவு செய்து ஒப்படைத்து உள்ளது. மேலும் ஏற்கனவே கட்டிய கட்டிடத்துக்கு ஏற்பட்ட செலவுத்தொகை ரூ.1¼ கோடியை அரசுக்கு செலுத்தி உள்ளது.

இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் புதிய இடத்தில் அரசு கலைக்கல்லூரிக்கான கட்டுமான பணிகள் கடந்த 14-ந்தேதி தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணிகளை முடித்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story