நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு
உடுமலை பா.ஜ.க.நகர தலைவர் எம்.கண்ணாயிரம் நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
உடுமலை கபூர்கான் வீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையும், நகராட்சியும் இணைந்து புறம்போக்கு ஆக்கிரமிப்புகளாக கட்டப்பட்ட கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதுபற்றி நகராட்சி ஆணையாளரும், நெடுஞ்சாலை உதவி பொறியாளரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஏற்கனவே காலி செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் கடைகள், கட்டிடங்கள் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக தற்போது கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை கட்ட தடை விதித்து அப்புறப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டிடம் கட்டுவது சட்டவிரோதமாகும். மேற்கண்ட இடத்தில் கட்டிடம் கட்டி வாடகை வசூலித்து வருகிறார்கள். சட்டத்துக்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டியதை உடனடியாக இடித்து சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நாளை (வெள்ளிக்கிழமை) பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.