இந்து மக்கள் கட்சியினர் ஆர்.டி.ஓ. விடம் மனு


இந்து மக்கள் கட்சியினர் ஆர்.டி.ஓ. விடம் மனு
x
திருப்பூர்


திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் சி.ஈஸ்வரன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்த கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்.டி.ஓ குமரேசனிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சமீப காலமாக கள்ளசாராய விற்பனை பெருகி வருகிறது. இதனால் சில தினங்களுக்கு முன்பு கள்ள சாராயம் குடித்து இதுவரை 23 பேர்களுக்கு மேல் இறந்து உள்ளனர். போலி மது தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து அதனை போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பிரதான கையொழுத்தாக மதுவை ஒழிப்பது என கூறினார். ஆனால் அதனை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த முடியாமல் தங்களது விற்பனை இலக்கை அதிகரித்து செல்வது வேதனையாக உள்ளது.

இந்த செயலை இந்து மக்கள் கட்சியினர் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தி கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் இதன் மூலம் கள்ள சாராயம் சாவுகள் குறையும், மேலும் தென்னை விவசாயத்தை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடைய வாய்ப்புள்ளது. அதனால் கள்ளுகடைகளை திறக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண மது விலக்கு அமுல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி விவசாய அணியின் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், தலைமையில் மாவட்ட மகளிரணி பொது செயலாளர் ஆயிஷா, சுரபி மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story