காஞ்சீபுரம் மாவட்டத்தில் மனு நீதி நாள் முகாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில்  மனு நீதி நாள் முகாம்
x

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன், துணைத்தலைவர் வசந்திகுமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், பத்மாபாபு, பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டநாவல் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தமிழ்வேந்தன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் 333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமையொட்டி சுகாதார துறை, கால்நடைத்துறை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை ரீதியாக அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவது குறித்தும் விளக்கி கூறினர். மேலும் நிகழ்ச்சியையொட்டி தோட்டநாவல் கிராமத்தில் நீர்நிலை அருகே பலன் தரும் மர கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தோட்டநாவல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், லோகநாதன், தாசில்தார் குணசேகரன் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story