காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிப்புஅரசு பள்ளி
கோடை விடுமுறையில் பயனுள்ளதாக மாற்ற காகிதத்தில் அலங் கார பொருட்கள் தயாரித்து அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அசத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
கோடை விடுமுறையில் பயனுள்ளதாக மாற்ற காகிதத்தில் அலங் கார பொருட்கள் தயாரித்து அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அசத்தி வருகின்றனர்.
அலங்கார பொருட்கள்
கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் செல்வது வழக்கம்.
சிலர், விரும்பிய இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். தற்போது மாண வர்களின் கைகளில் செல்போன் இருப்பதால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இதை தவிர்க்க மாணவ-மாணவிகளுக்கு காகிதத் தில் அலங்கார பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் கோடை விடுமுறை யை பயனுள்ளதாக மாற்றும் வகையில் காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் ஆகியோர் பேப்பர், பசை போன்றவற்றை வழங்கி அலங்கார பொருட்கள் தயாரிக்க ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:-
கோடை விடுமுறை
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால், மாணவ-மாணவிகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது.
இதனால் ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் செல்போனில் விளையாட்டுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி விட்டனர். அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது.
எனவே தற்போது கோடை விடுமுறையை பயனு உள்ளதாக மாற்றும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு காகிதத்தில் அலங் கார பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதை ஆர்வமுடன் கேட்டு மாணவர்கள் அலங்கார பொருட்கள் செய்து வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை பேரணி
மேலும் பள்ளிக்கு புதிதாக வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக கிரீடம் அணிவிக்கப்படுகிறது. எனவே கிரீடம் தயாரிக் கப்பட்டு வருகிறது. பொம்மை உள்ளிட்ட பொருட்களை தயா ரிக்க உள்ளனர். மாணவர்கள் தயாரித்த அலங்கார பொருட்க ளால் வகுப்பறைகள் அலங்கரிக்கப்படும்.
வருகிற 4-ந்தேதி பள்ளி திறப்பு கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.