தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன


தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

வானமுட்டிபெருமாள் கோவிலில் வழிபாடு

மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி வானமுட்டிபெருமாள் கோவிலில் தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மிகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ராகுகேது பெயர்ச்சியின் மீது நம் மக்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன.

தீவிரமான முடிவு

டெங்குவால் பல உயர்அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை ஒழிக்க முடியாதவர்கள் சனாதனத்தை ஒழிக்கப்போகிறார்களா?

டெல்டா பகுதியில் விவசாயிகள் இன்னும் சிரமப்பட்டு கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. காவிரிநீர் பிரச்சினைக்கு இன்னும் தீவிரமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர்கள் காவிரிநீரை எப்படி கொண்டு வந்தார்களோ அதுபோல் நமது தமிழக முதல்-அமைச்சரும் முயற்சி செய்ய வேண்டும்.

தமிழகத்தை சிறுமைப்படுத்தி பிரதமர் பேசவில்லை. பீகாரில் பெரும்பான்மையான மக்களுக்கு பெரும்பான்மையான உரிமையை கொடுக்க வேண்டும் என்று ராகுல் கூறுகிறார். தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை. இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story