உலக தண்ணீர் தினத்தையொட்டிநாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான்


உலக தண்ணீர் தினத்தையொட்டிநாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான்
x
தினத்தந்தி 22 March 2023 7:00 PM GMT (Updated: 22 March 2023 7:01 PM GMT)
நாமக்கல்

உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாகவும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நேற்று நாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட நேரு யுகேந்திரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தில்லை சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கொண்டிசெட்டிப்பட்டி பூங்கா அருகில் நிறைவு பெற்றது. இந்த மாரத்தானில் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருத்திகா, மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரகுமார், செயலாளர் கார்த்திகேயன், டாக்டர் எழில்செல்வன் உள்பட தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story