காரைக்குடியில்மினி மாரத்தான் போட்டி
காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
காரைக்குடி,
பொது சுகாதாரத்துறையில் நூற்றாண்டு நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் டாக்டர்கள், பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டியினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மாங்குடி எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயசந்திரன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் டாக்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி பெரியார் சிலை, வாட்டர் டேங்க், பர்மா காலனி வழியாக அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நிறைவு பெற்றது. போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ,5 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.