பரமக்குடியில் மாரத்தான் போட்டி
பரமக்குடியில் மாரத்தான் போட்டியை துப்புரவு பணியாளர்கள் தொடங்கி வைத்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி டி.டி.எஸ். மகாலில் நாளை முதல் 15-ந் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி மினி மாரத்தான் போட்டி நடந்ததது. லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி சந்தை கடை டி.டி.எஸ். மகால் வரை 6 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. புத்தக திருவிழா வரவேற்பு குழு தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் பசுமலை, நிர்வாகிகள் பெருமாள், ராஜா முன்னிலை வகித்தனர்.
ஆண்கள் போட்டியை துப்புரவு பணியாளர் கிருஷ்ணன், பெண்கள் போட்டியை துப்புரவு பணியாளர் செந்தாமரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், வி.ஜி.வி. குழுமம் வீர மருது பாண்டியன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். போட்டியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு புத்தக திருவிழா நிகழ்ச்சியின் போது பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.