கரூரில் மாரத்தான் போட்டி


கரூரில் மாரத்தான் போட்டி
x

கரூரில் மாரத்தான் போட்டி நடந்தது.

கரூர்

கரூர்,

இந்திய சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு புகையிலை இல்லா கரூரை படைப்போம் என்ற தலைப்பில் கரூர்-கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் மகாலில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள், போலீசார் உள்பட 500-க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புகையிலை இல்லாத வலிமையான சமுதாயத்தை படைக்க வேண்டும். புகையிலை போன்ற போதை பொருட்களில் இருந்தும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர்-கோவை சாலையில் தொடங்கிய மாரத்தான் போட்டி மனோகரா கார்னர் ரவுண்டானா, ஜவகர்பஜார், சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர், காமராஜபுரம் வழியாக வந்து மீண்டும் மகாலை வந்தடைந்தது. பின்னர் மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story