சிவகாசியில் மாரத்தான் போட்டி
சிவகாசியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 1,800 பேர் கலந்து கொண்டனர்.
சிவகாசி,
சிவகாசியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 1,800 பேர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டி
தாய்பால் விழிப்புணர்வு, பசுமை சிவகாசி, போதையில்லா சிவகாசி ஆகியவற்றை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று காலை 6 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டி பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம், காமராஜர் சிலை, மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன், டான் பாமா, ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, இரட்டைபாலம், விளாம்பட்டி முக்கு, ஸ்டேட் பேங்க் வழியாக 6 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த பின்னர் மீண்டும் ஆர்ட்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
தொடக்கம்
இந்த மாரத்தான் போட்டியை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் 92 வயது ராஜேந் திரன், 88 வயது செந்தியம்மாள் உள்பட 1,800 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் 35 பேருக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டி நடைபெற்ற போது அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.