பெண்களுக்கான மாரத்தான் போட்டி
மதுரையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது
மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி, போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரும், டீனுமான ரத்தினவேல், பேங்க் ஆப் மகாராஷ்டிரா மேலாளர் ரூபா வாசுதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கி கவுரவப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் நிர்வாகி டாக்டர் பாலகுருசாமி மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.