போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்


போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்
x

போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

தஞ்சாவூர்

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாரத்தான் போட்டி

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

5 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் உத்தரபிரதேசம், மராட்டியம், மைசூர் மற்றும் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, மதுரை, சேலம், கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, தேனி, சென்னை, அரியலூர், பொன்னமராவதி, நாகை, பெரம்பலூர், சீர்காழி, ஈரோடு, மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 1,350 பேர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஓடினார்

மேலும் 20 கிலோமீட்டர் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு ஓடினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆடவர் பிரிவில் டிவிசிந்த்குமார் (உத்தரபிரதேசம்), மணிகண்டன் (தஞ்சை), ராமேஷ்வர் முஞ்சால் (மராட்டியம்), பிரகதீஸ்வரன் (தஞ்சை), மணிகண்டா (மைசூர்), வினோத்குமார் (மதுரை), லட்சுமிஷா (மைசூர்) மற்றும் ஹரிகிருஷ்ணா (திருவையாறு) ஆகியோர் பரிசு பெற்றனர்.

பெண்கள் பிரிவில் அர்ச்சனா (மைசூர்), கவிதா (மதுரை), கீதாஞ்சலி (திருச்சி), மல்லேஸ்வரி (மைசூர்), சுவாதி (திருச்சி), தேஜஸ்வினி (திருச்சி), சுகன்யா (தஞ்சை), லாவண்யா (சேலம்), ரித்திகா (தஞ்சை), துர்கா (தஞ்சை) ஆகியோர் பரிசு பெற்றனர். பாரா விளையாட்டு வீரரான பெரம்பலூரை சேர்ந்த கலைச்செல்வன் தனது 397-வது மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்தி கேசவன், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், துணைவேந்தர் வேலுசாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா, கல்வி புல முதன்மையர் ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் ரமேஷ் செய்து இருந்தார்.


Related Tags :
Next Story